என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்.
இலங்கை அகதிகள் முகாமில் மாரியம்மன் கோவில் திருவிழா
மேலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ளது திருவாதவூர். இங்கு இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடந்த ஒரு வார காலமாக விரதம் இருந்து வந்தனர்.
விழாவையொட்டி அங்குள்ள முனியாண்டி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வாயில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
முதல்நாள் மாலை பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு மேலும் பல இலங்கை அகதகள் முகாம்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
Next Story






