உள்ளூர் செய்திகள்
காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-05-11 09:46 GMT   |   Update On 2022-05-11 09:46 GMT
வலங்கைமான் அருகே வேடம்பூர் கிராமத்தில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரிவர கிடைப்பதில்லை, கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். 

மேலும் கிராமசபை கூட்டத்தை சரியாக நடத்தவில்லை என்றும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு கையெழுத்து இட மறுப்பது போன்ற காரியங்களில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராமன் என்பவரை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடந்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டம் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News