உள்ளூர் செய்திகள்
.

10, 11, பிளஸ்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் வெளியீடு

Update: 2022-04-28 10:16 GMT
10, 11, பிளஸ்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை வெளியிட்டனர்.
சேலம்:

தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் அடுத்த மாதம் (மே) தொடங்குகிறது. 

 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 176 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை 23 ஆயிரத்து 302 மாணவர்கள், 22 ஆயிரத்து 217 மாணவிகள் என மொத்தம் 45 ஆயிரத்து 519 பேர் எழுதுகிறார்கள். இவர்களின் 379 பேர் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் ஆவர்.

இதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் 154 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 20 ஆயிரத்து 948 மாணவர்கள், 21 ஆயிரத்து 245 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 193 பேர் எழுதுகின்றனர். 281 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 பொதுத் தேர்வு வருகிற 5-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வு மாவட்டத்தில் 154 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வை 18 ஆயிரத்து  394 மாணவர்கள், 20 ஆயிரத்து 861 மாணவிகள் என மொத்தம்  39 ஆயிரத்து 255 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 227 பேர் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் ஆவர்.

பாடத்திட்டம் வெளியீடு
தற்போது 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் வெளியி டப்பட்டுள்ளது.  இத்தேர் விற்கான வினாக்கள் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் முழுவதி லிருந்தும் கேட்கப்படும். இப்பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News