உள்ளூர் செய்திகள்
.

பள்ளிபாளையத்தில் லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது

Update: 2022-04-17 05:56 GMT
பள்ளிபாளையத்தில் லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது
பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள ஐந்துபனைபகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது46), லாரி டிரைவர். இவர் நேற்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மாரிமுத்துவை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.

இதுகுறித்து மாரிமுத்து பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் மாரிமுத்துவிடம் பணம் பறித்ததாக ஐந்துபனைபகுதியை சேர்ந்த சசிகுமார்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News