உள்ளூர் செய்திகள்
.

கிணற்றில் பிணமாக மிதந்த மாணவன்

Update: 2022-04-15 08:30 GMT
எருமப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்தான்.
எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள ஈச்சவாரி கிழக்கு வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். இவரின் இளைய மகனான அரவிந்த் (வயது 17) வளையப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். 

கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அரவிந்த் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் அவனை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இந்தநிலையில் மாணவன் அரவிந்த் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தான்.

 இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் பிணமாக மிதந்த அரவிந்த் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதையடுத்து எருமப்பட்டி போலீசார் அவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டானா? அல்லது தவறி விழுந்து இறந்தானா? என பல கோணங்களில்விசாரித்து வருகிறார்கள்.

எருமப்பட்டி அருகே காணாமல் போன மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது
Tags:    

Similar News