தமிழ்நாடு

கட்சியை கலைத்து விடுகிறேன்: பா.ஜ.க.-விற்கு சீமான் சவால்

Published On 2024-05-24 09:03 GMT   |   Update On 2024-05-24 09:52 GMT
  • தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள்.
  • கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது.

சென்னை:

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த சீமான், தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தனியாக நீங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை என்று பார்ப்போம். நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பாஜக பெற்று இருந்தால் நான் கட்சியை கலைத்துவிட்டு போய் விடுகிறேன். யார் பெரிய கட்சி என்று தெரிந்து விடும் இல்லையா. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது. தனியாக நீங்கள் எவ்வளவு வாக்கு பெற்று இருக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும் என்று பாஜகவிற்கு சவால் விட்டுள்ளார்.

Tags:    

Similar News