என் மலர்
நீங்கள் தேடியது "Annamalai"
- ஜி20 மாநாட்டின்போது உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் இருந்தனர்.
- மக்கள்தொகையை வைத்து பார்த்தால் 850 எம்.பி.க்கள் வேண்டும். அதனால்தான் பெரிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா என்று சொன்னால் ஊழல் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு காங்கிரஸ் ஆட்சி இருந்தது. 2014-ம் ஆண்டு மோடி வந்த பிறகே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது. சாதாரண மக்களுக்காக ஊழல் இல்லாமல் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
ஜி20 மாநாட்டின்போது உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். நடராஜர் சிலையை வைத்தே மாநாடு நடத்தப்பட்டது. தமிழனாக பிறக்கவில்லை என்றாலும் பிரதமரின் மூச்சு தமிழ் தமிழ் என்றே சொல்கிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்கு வழி சாலை பலரின் எதிர்பார்ப்பு. 2024 ஜூன் மாதம் அத்திட்டம் நிறைவு பெறுகிறது. காமராஜர் 12 அணைகள் கட்டினார். தற்போது டாஸ்மாக்கை அமைத்து வருகிறார்கள். மக்களை ஏமாற்றும் விதமாக மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 6 மாதம் மட்டும் செயல்படுத்தும் திட்டமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். மக்கள்தொகையை வைத்து பார்த்தால் 850 எம்.பி.க்கள் வேண்டும். அதனால்தான் பெரிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தல் என்றால் மோடி. சட்டமன்ற தேர்தல் என்றால் தி.மு.க. இருக்கக்கூடாது என்ற முடிவை எடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மறைந்த தலைவர்கள் குறித்து தொடர்ந்து அண்ணாமலை பேசி வருவதால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கருத்து.
- பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் இதனை மறைமுகமாக உணர்த்தும் வகையில், இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மறைந்த தலைவர்கள் குறித்து தொடர்ந்து அண்ணாமலை பேசி வருவதால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்திருந்தது.
இது தொடர்பாக சமீபத்தில் விளக்கம் அளித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, "அ.தி.மு.க.- பா.ஜ.க இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க.வின் தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. நான் யாரையும் தவறாக பேசவில்லை," என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகியோர் அவசர அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் உள்ள அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்த அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் ஈபிஎஸ் உறுதியாக இருப்பதாக கூறினர்.
மேலும், மாநில தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
- நாளை மாலை கோவை குனியமுத்தூர், மாச்சாம்பாளையம் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
- நடைபயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பா.ஜ.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை தனது பாதயாத்திரையை தொடங்கினார்.
இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்டார்.
முதல் கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அடுத்தக்கட்டமாக கடந்த 3-ந்தேதி தனது 2-ம் கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கிய அண்ணாமலை, அங்கிருந்து தேனி, திண்டுக்கல்லிலும் பாதயாத்திரை மேற்கொண்டார்.
21-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரத்தில் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் மக்களை சந்தித்தார்.
இன்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். நடைபயணம் மேற்கொள்ள வரும் அண்ணாமலைக்கு கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அவர் மாலை 3 மணிக்கு வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்டைக்காரன்புதூர் பகுதியில் நடைபயண பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது திறந்த வேனில் இருந்தபடி பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார்.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபயணத்தை முடித்து கொண்டு இரவு கோவையில் தங்குகிறார்.
நாளை மாலை கோவை குனியமுத்தூர், மாச்சாம்பாளையம் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார். 25-ந் தேதி(திங்கட்கிழமை) கோவை கணபதி பஸ் நிலையத்தில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
அங்கிருந்து தொடங்கும் நடைபயணமானது பல்வேறு வீதிகள், முக்கிய சந்திப்புகள் வழியாக சென்று இடையர்பாளையம் சந்திப்பு பகுதியில் நிறைவடைகிறது. தொடர்ந்து 26-ந் தேதி கோவை ராம்நகர் ராமர் கோவிலில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
அங்கிருந்து பல்வேறு பகுதிகள் வழியாக பொதுமக்களை சந்தித்தபடி செல்லும் அண்ணாமலை ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அங்கு திரண்டிருக்கும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்த நடைபயணத்தில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்க உள்ளனர்.
நடைபயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பா.ஜ.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தி.மு.க. அரசு தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது.
- தி.மு.க. அரசு கடந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் நேற்றிரவு அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 2022-23ம் ஆண்டில் 22 விழுக்காடு விற்பனை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான சாராய ஆலைகள் தி.மு.க. கைவசம் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கள்ளுக்கடை திறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இந்து மதத்தை தவறாக பேசி அழிக்க பார்க்கின்றனர். நாங்கள் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தினரையும் அரவணைத்து வருகிறோம். பா.ஜ.க. அரசு கடந்த 9 ஆண்டு காலமாக சிறப்பான ஆட்சி கொடுத்து கொண்டிருக்கிறது.
9 ஆண்டு காலத்தில் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதி ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி. ஆனால் தி.மு.க. அரசு தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது. 2024 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறினாலும் நாங்கள் தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து வேரோடு அறுக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
தி.மு.க. அரசு கடந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். 28 கட்சி சேர்ந்து இந்தியா கூட்டணி என்று வைத்துள்ளனர். மோடி என்ற ஒற்றை மனிதனை வீழ்த்துவதற்காக சேர்ந்துள்ளனர். வருகிற 2024-ம் ஆண்டு மக்கள் பெரும்பாலானவர்கள் மோடியை ஆதரித்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று மாலை திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
- என்னை பொறுத்த வரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை
- அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வார்த்தைப்போர் நடைபெற்ற வந்தது. இறுதியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.
இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து வெளிப்படையில் பேச வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாய்மொழி உத்தரவிட்டு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில், இன்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் பாத யாத்திரையை தொடங்க இருக்கிறார்.
அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறோம். ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதால் அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டு
* ஒரு எம்.பி. 22 லட்சம் மக்களை கையாள்வது எளிதாக விசயம் கிடையாது. மக்கள் தொகையை மட்டுமே வைத்து தொகுதி வரையறை இருக்கக்கூடாது. அதில் பல்வேறு காரணிகள் இருக்க வேண்டும்.
* என்னை பொறுத்த வரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை.
* தமிழக பா.ஜனதாவுக்கும்- அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை. இதில் தெளிவாக இருக்கிறோம்
* அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம். ஏனென்றால் அவர்களுடைய பேச்சை வைத்து சொல்கிறேன்.
* என்.டி.ஏ. கூட்டணியின் முக்கிய புள்ளியே பிரதமர் மோடிதான். அவரை 3-வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் நோக்கம். இதை அதிமுக ஏற்றுக் கொள்கிறது.
* மத்தியில் பிரதமர் மோடியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியையும் அறிவிக்க வேண்டும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதைப்பற்றி தேசிய தலைவர்கள் கூற வேண்டும். நான் யாரையும், எங்கேயும் தவறாக பேசவில்லை.
* என்னைப் பற்றி வரும் விமர்சனம் மற்றும் கருத்துக்கு பதில் அளிக்கமாட்டேன். ஆனால், என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது பதில் பேசுவேன். நாளைக்கும் பேசுவேன். நாளைக்கு அடுத்த நாளும் பேசுவேன். அடுத்த வாரமும் பேசுவேன். தன்மாத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய நான் இங்கே வரவில்லை. அதில் தெளிவாக இருக்கிறேன். தன்மானம் முக்கியம். அதன்பின்தான் அரசியல். தன்மானம் விசயத்தில் பதில் அளிப்பது என்னுடைய கடமை மட்டுமல்ல. அது உரிமையும் கூட.
* அவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. பதில் சொல்லவும் முடியாது. செல்லூர் ராஜூ பேசியதற்கு நான் எப்படி பதில் சொல்வேன். நான் பதில் சொல்ல முடியாது. தேசிய தலைமை, தேசிய தலைவர்கள் சொல்ல வேண்டும்.
* அதேபோல் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் பேசியுள்ளனர். அதற்கும் மத்தியில்தான் பதில் சொல்ல வேண்டும். யாரெல்லாம் மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் ஒரு மையப்புள்ளியில் இணைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
* தமிழகத்தில் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டிற்கு காரணம், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம் உள்ளது. ஒவ்வொரு கட்சியின் சித்தாந்தமும் வேறுவேறு. அதனால் இதுபோன்ற மோதல் வருவது சகஜம்தான்.
* அதிமுக கட்சி 1972-ல் உருவான சரித்திரம் வேறு. சனசங்கம் 1950 காலக்கட்டத்தில் உருவான கருத்து வேறு. 1980-ல் பா.ஜனதா கட்சியாக மாறிய சரித்திரம் வேறு. எல்லா பிரச்சனைகளையும், விசயங்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
* அறிஞர் அண்ணாவை நான் எங்கேயும் விமர்சித்தது கிடையாது. சனாதன தர்மம் விவகாரத்தில் பா.ஜனதா போன்று அதிமுக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் குரலும், திமுகவின் குரலும் ஒரே குரல்தான். அதில் எந்த மாறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்டத்தையே, அவர்கள் ஆதரித்து என்று பேசுவதில்லை. திமுக சொன்னால் சரி என்று கேட்டுக்கொள்கிறது.
*தேசிய கட்சிகள் அனுகக்கூடிய பிரச்சனைகளில் ஒரு விசத்தியாசம் உள்ளது. இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையில் பிரச்சினை இல்லை.
- முதல்கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
- தாராபுரம் வடதாரை பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபயணம் மேற்கொள்கிறார்.
தாராபுரம்:
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். முதல்கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அடுத்தக்கட்டமாக கடந்த 3-ந்தேதி தனது 2-ம் கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அண்ணாமலை தொடங்கினார். பின்னர் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இன்று 21-ந்தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை 3-30 மணிக்கு அண்ணாமலை காங்கயம் வருகிறார். அவருக்கு காங்கயம் -திருப்பூா் ரோடு விடுதி பஸ் நிறுத்தத்தில் பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை காங்கயம் போலீஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பேசுகிறாா்.
பின்னர் தாராபுரம் வடதாரை பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபயணம் மேற்கொள்கிறார். வடதாரையில் தொடங்கி கடைவீதி வழியாக பொள்ளாச்சி சாலையில் அமராவதி ரவுண்டானா சென்று புதிய பஸ் நிலையம், உடுமலை சாலை, போலீஸ் நிலையம் சர்ச் கார்னர் வழியாக நடைபயணம் நடைபெறுகிறது. பின்னர் தாராபுரம் புதிய போலீஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்ற உள்ளார். நாளை 22-ந்தேதி மடத்துக்குளம்- உடுமலையில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
- கரு. நாகராஜன் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்படுகிறார்.
- ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கான மாநில நிர்வாகிகள் பெயர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்படுகிறார்.
மேலும் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கான மாநில நிர்வாகிகள் 30 பெயர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
அனைவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் என அவர் கூறியுள்ளார்.
ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான மாநில நிர்வாகிகள் பெயர் பட்டியல்...


- தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை.
வேடசந்தூர்:
என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தி.மு.க.வினரின் வருமானத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது. மக்களின் வருமானம் கல்விக்குதான் செல்ல வேண்டும்.
பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகவே பிறந்த கட்சி கம்யூனிஸ்டு, அவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது. தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கடந்து தற்போது இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கின்றனர். தி.மு.க.வின் வளர்ச்சியே இதுதான். அவர்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தொண்டர்கள் அந்த குடும்பத்திற்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதியே பலருக்கு செல்போனில் பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது முழுஅமாவாசை நாளில் தொடங்கினால் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க அமாவாசை நாளில் திட்டம் தொடங்க நாள் பார்க்கலாமா? திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். தற்போது பெரும்பாலான அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை சோதனை பீதியை ஏற்படுத்தி வருகிறது. இலாகா இல்லாத தி.மு.க அமைச்சர் இன்னும் சிறையில் இருக்கிறார். மேலும் சில அமைச்சர்களுக்கு சோதனை விரைவில் வரும்.
செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான். அவரை தி.மு.க அரசு தொடர்ந்து பாதுகாத்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனது நிறைவு நடைபயணத்தை பழனியில் அண்ணாமலை இன்று நிறைவு செய்கிறார்.
- என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
- 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்து கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றவுடன் திருப்பணிகள் நிலுவையில் உள்ள கோவில் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டார். அதன்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வினர் ஆட்சி மீது வேண்டும் என்றே குறை கூறுகிறார்கள். சனாதனத்தை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளான உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி திட்டம் உட்பட கோட்பாடுகளை எதிர்க்கிறோம்.
என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் சமத்துவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடமை உறுதியுடன் தற்போதைய ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. பொழுதுபோக்குக்காக சிலர் எதையோ சொல்கிறார்கள். கோவில் இறைபணி தொடரும்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற காசி விசுவநாதர் கோயில் ஆயிரமாவது குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர். 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி 38 பேர் அர்ச்சகராகி உள்ளனர். 1959-ம் ஆண்டுக்கு பிறகு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தான் அதிக அளவில் தமிழகத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
அனைத்து கோவில்களிலும் முறைகேடுகள் தடுக்கப்படும். மக்களாட்சி வந்தபின் இந்து கோவில்கள் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இல்லை. இறை நம்பிக்கை அவரவர் விருப்பம். சமத்துவம் அங்கம் வகிக்கும் ஆட்சி தி.மு.க. இதனால் இறை நம்பிக்கை உள்ளவர்களையும் வரவேற்கிறோம், இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் வரவேற்கிறோம்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி கடந்து 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுவரை 10 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க நேர்ச்சை செலுத்தும் வகையில் ரூ.4.5 லட்சம் செலவில் தங்க தேர் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கும்பாபிஷேக நாளிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் 37 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர்.
- மகளிர் உரிமைத்தொகை ரூ.2 கோடியே 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு வழங்குவதாக கூறிவிட்டு 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு பெருமை பேசி கொள்கின்றனர்.
நிலக்கோட்டை:
என் மண், என் மக்கள் பிரசார பயணத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நிலக்கோட்டையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தென்தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்கு எந்த திட்டத்தையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நிலக்கோட்டை மல்லிகை பூக்கள்தான் உலகம் முழுவதும் மதுரை மல்லி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் 37 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர். நிலக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் மது அருந்தி மாணவிகள் பிறந்தநாள் கொண்டாடியதாக நாளிதழ் மூலம் அறிந்தேன். மேலும் பல்லடம் பகுதியில் குடிபோதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கும்பல் வெட்டி கொலை செய்தது. தமிழகத்தில் மதுவால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஆனால் தி.மு.க. அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை. பெரும்பாலான மதுஆலைகள் தி.மு.க. பிரமுகர்களின் ஆலைகளாக உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளை மூட தி.மு.க. நடவடிக்கை எடுக்காது. மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் நிறைவேற்றப்படவில்லை.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2 கோடியே 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு வழங்குவதாக கூறிவிட்டு 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு பெருமை பேசி கொள்கின்றனர். 10 சதவீத தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசு 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
மோடி பிரதமராவதற்கு முன்பு நாடு பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. தற்போது உலக நாடுகள் மெச்சும் அளவிற்கு சந்திராயன் 3 மூலம் நிலாவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் இந்தியா வளர்ந்து வருகிறது. ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார்.
உச்சநீதிமன்றம் நோக்கி கர்நாடகம் செல்கிறது. தமிழகத்தின் வாதங்கள், விவசாயிகளின் கஷ்டத்தை உச்சநீதிமன்றம் புரிந்துகொள்ளும். காவிரி நீர் வழக்கில் தமிழகத்திற்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். இதில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. கர்நாடகா துணைமுதல்வர் சிவக்குமார் காவிரி நீர் தரமாட்டேன் என பேசி வருகிறார். மேகதாது அணை கட்ட குறியாக இருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம் விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பளிக்கும்.
இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். போதிய அளவு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் ஒரு எப்.ஐ.ஆர்.கூட போடவில்லை. கைது நடவடிக்கை இல்லை. ஏ.ஆர்.ரகுமான் அவரது பணியை சரியாக செய்துள்ளார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் சரியாக செயல்படவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.