என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் கண்டனம்
    X

    அண்ணாமலைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் கண்டனம்

    • தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்
    • ஆட்சி அதிகார ஆணவத் திமிரே அவர்களின் இதுபோன்ற பேச்சுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது

    திருச்சி:

    திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் செய்தியாளர்களை மிகத் தரக்குறைவாக விமர்சித்த செயல் கடுமையான கண்டனத்திற்குரியது.

    கேள்விகளை எதிர்கொள்ள திராணியில்லாமல் இதுபோன்று இழிவாக நடந்துகொள்வது என்பது பா.ஜ.க.வினரின் வாடிக்கையாகவே உள்ளது.

    அண்ணாமலை மட்டுமல்ல, ஹெச்.ராஜா போன்றவர்களும் தொடர்ந்து தரக்குறைவாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    ஆட்சி அதிகார ஆணவத் திமிரே அவர்களின் இதுபோன்ற பேச்சுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த போக்கினை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×