உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதா: மீண்டும் கவர்னருக்கு கடிதம் அனுப்பிய முதலமைச்சர்

Published On 2022-04-14 16:16 GMT   |   Update On 2022-04-14 16:16 GMT
நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழக கவர்னர் அனுப்பாதது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

நீட் விலக்கு மசோதாவை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பாதது வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின், நான் நேரில் சந்தித்து வலியுறுத்திய போது மசோதாவை அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி அளித்தார். மசோதா பற்றி கவர்னர் உறுதியான பதிலளிக்காததால் தேநீர் விருந்தில் பங்கேற்பது முறையாக இருக்காது. கவர்னருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும் சுமுகமாகவும் இருக்கும் எனவும் முதல் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 



மக்கள் நலன், அரசியல் அமைப்பு சட்டப்படி கடமையை செய்யும்போது மக்களும் மாநிலமும் வளம் பெறும் என்றும் முதல் அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News