உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் லட்சுமணன் பேசும் போது எடுத்த படம்,

தமிழகம் முழுவதும் ரிக் வண்டிகள் வேலை நிறுத்தம்

Published On 2022-03-31 08:26 GMT   |   Update On 2022-03-31 08:26 GMT
தமிழகம் முழுவதும் ரிக் வண்டிகள் வேலை நிறுத்தம் தொடங்கினர்.
திருங்செங்கோடு:

தமிழ்நாடு ரிக் உரிமை யாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனை கூட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது. 
அதில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பிற கட்டணத்தை உயர்த்திக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதேபோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டீசலுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 5 சதவீதம் என விதிக்கவேண்டும், மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து திருச்செங் கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும் தமிழ் நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவரு மான லட்சுமணன்  கூறியதாவது :
நேர் முகமாகவும் மறைமுகமாகவோ லட்சக் கணக்கான குடும்பங்கள் பங்கு பெற்றுள்ள ரிக் தொழில் டீசல் விலை  உயர்வால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக டீசல் விலை உயர்வுக்கு ஏற்ற வகையில் எங்களுடைய கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் டீசல் உதிரி பாகங்கள் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும்.
ரிக் தொழிலுக்கு உள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 5 சதவீதம் என அறிவிக்க வேண் டும். லாரிக்கு உள்ளதுபோல் ஒரே ஒரு நாடு முழுவதும் ஒரே வழி என்ற வகையில் ஒன் டாக்ஸ் ஒன் இந்தியா என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் ரிக் வண்டிகளை ஓட்டாமல் ஒரே இடத்தில் நிறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட் டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார். அதன்படி இன்று ரிக் வண்டிகள் திருச்செங்கோட்டில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டன.
Tags:    

Similar News