search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டிகள்"

    • துறையூர் நகராட்சியில்சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள்
    • 11 வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டது.

     துறையூர், 

    திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் (பொ) ராமர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் துறையூர் நகராட்சி பகுதியில், தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வரும், 11 வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், வீரமணிகண்டன், அம்மன் பாபு உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், நகரத் துணைச் செயலாளர் இளங்கோ,நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மக்கும் குப்பை, மக்கா குப்பை என தினமும் 12 டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.
    • 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்கு ரூ. 65.70 லட்சம் செலவில் 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 9 வாகனம் வாங்கபட்டது . இந்த வாகனங்களை பயன்பட்டிற்கு விடும் பணியினை நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு இரண்டு டன் குப்பபைகளை அள்ளும் 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

    இது குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா கூறும்போது ;-

    இந்த வாகனங்கள் மூலம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என நாள்தோறும் 12 டன் குப்பைகள் அள்ளபட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்து செல்லபடும்.

    அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கி சலுகை விலையில் விலையில் வழங்கப்படும். மேலும் நகராட்சி பகுதியில் இனி குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அள்ளப்படும் என்றார்.

    • மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மணல் ஏற்றி வந்த வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் பாபநாசம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெ க்டர் கலைவாணி ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

    அப்போது கோவில் தேவரா யன்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்து கொண்டிருந்த மாட்டு வண்டிகளை தடுத்தி நிறுத்தினார்.

    போலீசாரை பார்த்தவுடன் 3 மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவ ர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    விசாரணையில் எவ்வித அரசு அனுமதி இன்றி ஆற்று மணல் ஏற்றி கொண்டு வந்தது கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் ஏற்றி வந்த மணல் வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்களிடையே தொழுநோய், தேமல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நகரின் முக்கிய பகுதிக ளில் புகைமருந்து அடிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில், ஒருங்கிணைந்த நோய் தடுப்பு, தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணிகள் கடந்த மூன்று நாட்களாக துணை இயக்குநர் டாக்டர். ஹேமச்சந்த காந்தி உத்தரவி ன்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.

    கிள்ளிவளவன் மேற்பார்வையில் நடைபெற்றது. இப்பணியை ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி செந்தில் தொடக்கி வைத்தார்.

    இதில் கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தூய்மை காவலர்கள், மஸ்தூர் பணியாளர்கள், நூறுநாள் திட்ட பணியாளர்கள் ஆகியோர் தேவையற்ற, டயர், பிளாஸ்டிக், பானை போன்ற பொருட்களை கண்டறிந்து ஒட்டு மொத்தமாக வண்டிகள் மூலம் அப்புறப்படுத்தினர்.

    மக்களிடையே தொழுநோய், தேமல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கீழத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் புகைமருந்து அடிக்கப்பட்டது.

    இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், வட்டார மருத்துவம் சாரா மேற்பா ர்வையாளர் கதிரேசன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், கதிரவன், பால சண்முகம், விக்னேஷ், ஊராட்சி செயலாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இப்பணியை மாவட்ட பூச்சி இயல் அலுவலர் சிங்காரவேலு ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், சான்றிதழ், கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் நாகூர் வீ.ஹெச்.எப் குடும்பத்தினர் மற்றும் திட்டச்சேரி நண்பர்கள் இணைந்து நடத்திய குதிரை வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியை நாகை தி.மு.க மாவட்ட செயலாளர் கெளதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்போட்டி புதிய குதிரை, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

    இதில் சேலம், கோயம்புத்தூா், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.

    பந்தய தொலைவு குதிரைகளுக்கு ஏற்ப நிா்ணயிக்கப்பட்டது. இதில் பெரிய குதிரையில் சென்னை, கரூர், பேராவூரணி குதிரைகள் முதல் முன்று இடங்களை பெற்றது.

    கரிச்சான் குதிரையில் திப்புராஜபுரம், நாகூர், பூண்டி குதிரைகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றது. புது குதிரையில் 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதலிடம் திருச்சி, அரதாங்கி குதிரைகளும், 2ம் நாகை, மதுரை குதிரைகளும், 3ம் திருச்சி, நாகூர் குதிரைகளும் பரிசுகளைப் பெற்றன.

    வெற்றி பெற்ற குதிரை வண்டிகளை ஓட்டியவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், பரிசுக் கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

    இதில் நாகூர் தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், திட்டச்சேரி அ.தி.மு.க நகர செயலாளர் அப்துல் பாசித், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி, வி.ஹெச்.எப் குடும்பத்தார் நூர்சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வந்திருந்தனா். இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

    ×