உள்ளூர் செய்திகள்
வெறிச்சோடி கிடக்கும் காட்சி சேலம் இரண்டடுக்கு மேம்பாலம்.

முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின-மக்கள் வீடுகளில் முடக்கம்

Published On 2022-01-23 06:52 GMT   |   Update On 2022-01-23 06:52 GMT
முழு ஊரடங்கு காரணமாக சேலம் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீடுகளில் முடங்கினர். சேலம் புதிய, பழைய பஸ் நிலையங்கள், ஜங்ஷன், ஐந்து ரோடு, நான்கு ரோடு, சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம் பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, சீலநாயக்கன் பட்டி  உள்பட நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. 

ஓட்டல்களில், ‘பார்சல்’ மட்டும் வழங்கப்பட்டன.  சேலம் மாநகரை சுற்றி செல்லும் முக்கிய சாலைகள் அனைத்தும், வாகன போக்குவரத்தின்றி காணப்பட்டன. 

மருந்து கடைகள், பெட்ரோல் பங்க் மட்டும் செயல்பட்டது. 24 மணி நேரமும்  வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், சில சரக்கு வாகனங்கள், மருத்துவ வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.  

அதேபோல் நான்கு வழிச்சாலைகளில் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை எடுத்துச் சென்ற  டிரைவர்கள் காபி, டீ, சாப்பாட்டை தேடி சிரமத்துக்குள்ளாகினர்.

 சேலம் மாநகரில், 90 சதவீதத்துக்கு மேலான ஓட்டல்கள் மூடப்பட்டி ருந்தன.   திறக்கப்பட்டிருந்த சில ஓட்டல்களிலும் கூட்டம் இன்றி காணப்பட்டன. அசைவ உணவகங்களில் ஓரளவு விற்பனை நடந்தது. வியாபாரம் பாதிப்பால் உரிமையாளர்கள் பாதிக்கப் பட்டனர்.
Tags:    

Similar News