செய்திகள்
கோப்புப்படம்

பொதுவழியை ஆக்கிரமித்த கோவில்-பொதுமக்கள் புகார்

Published On 2021-07-01 07:30 GMT   |   Update On 2021-07-01 07:30 GMT
பொது வழியை 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
 
திருப்பூர் மாநகராட்சி 15-வது வார்டு அருமைக்காரர் தோட்டம் பகுதி மக்கள் 25க்கும் மேற்பட்டோர் பொதுவழியை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி முதல் மண்டல அலுவலக உதவி கமிஷனர் சுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

அருமைக்காரர் தோட்டம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் பொதுவழியை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதை தடுக்க கோரி மனு அளித்தோம்.அதிகாரிகள் அங்கு வந்து கோவில் கட்டக்கூடாது என அறிவுறுத்தினர். ஆனால் அதையும் மீறி அங்கு கட்டுமான பொருட்கள் இறக்கி கோவில் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவழியை 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். பனியன் நிறுவனங்களும் உள்ளன. எங்கள் பகுதிக்கு செல்ல இந்த ஒரு வழி மட்டுமே உள்ளது. கோவில் கட்டினால் எங்கள் பகுதிக்கு செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.  

எனவே கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற உதவி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
Tags:    

Similar News