செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

தனியார் ஆம்புலன்சுகள் அதிக கட்டணம் வசூல்- ஓ.பன்னீர்செல்வம் புகார்

Published On 2021-05-20 03:19 GMT   |   Update On 2021-05-20 03:19 GMT
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்சுகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்சுகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.

சென்னையில் 15 கி.மீ-க்கு சாதாரண ஆம்புலன்சுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500-ம், ஆக்சிஜன் வசதி இருந்தால் ரூ.9 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.

நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிப்பதை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News