என் மலர்

  நீங்கள் தேடியது "O Panneer Selvam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வமும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
  • தென் மாவட்டங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

  அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு செல்லும் போதும் சேலத்தில் இருந்து சென்னை வரும் போதும் அ.தி.மு.க. நிர்வாகிகளை தவறாமல் சந்தித்து பேசி வருகிறார். ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றவும் தவறுவதில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடமாவட்டங்களை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். ஆனால் மற்ற வெளி மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்னும் செல்லவில்லை. இதை தொடர்ந்து இந்த சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

  அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். சுதந்திர தினத்துக்கு பிறகு அடுத்த வாரம் இந்த சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வமும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். தென் மாவட்டங்களில் இருந்து அவர் தனது பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த சுற்றுப் பயணத்துக்கு போட்டியாகவே எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட சுற்றுப்பயண திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டெல்லியில் இருந்து வக்கீல் குரு கிருஷ்ணகுமார் நேற்று இரவே சென்னை வந்தார். இரவு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பும் தயாராகி உள்ளது.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

  அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் கடந்த மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என்னிடம் அனுமதி பெறவில்லை.

  எனது அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே அந்த பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். வழக்கு போட்டார். இதே போல் வைரமுத்து என்ற பொதுக்குழு உறுப்பினரும் வழக்கு போட்டார்.

  இந்த இரு வழக்குகளும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறி அந்த வழக்குகளை டிஸ்மிஸ் செய்தார்.

  இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். சுப்ரீம் கோர்ட்டும் அந்த வழக்கை விசாரிக்க மறுத்து ஐகோர்ட்டில் நிவாரணம் தேடிக்கொள்ளும்படி அறிவித்தது.

  இதனால் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் ஐகோர்ட்டை நாடினார். மீண்டும் அந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கத் தொடங்கினார்.

  இந்த நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்றிவிட்டு வேறு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

  இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. அதை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்றுக்கொண்டாலும் வழக்கை வேறுநீதிபதிக்கு மாற்றும்படி பரிந்துரை செய்தார். இதையடுத்து பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிதாக நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

  கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆஜராக டெல்லியில் இருந்து வழக்காட வக்கீல்கள் வர இருப்பதாக கூறினார். எனவே வழக்கு விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

  டெல்லியில் இருந்து வக்கீல் குரு கிருஷ்ணகுமார் நேற்று இரவே சென்னை வந்தார். இரவு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

  ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பும் தயாராகி உள்ளது. இது தொடர்பாக வக்கீல்களுடன் இரவில் நீண்டநேரம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
  • தலைமை நீதிபதி என்.வி ரமணா, இந்த வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

  சென்னை:

  அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்து வன்முறை ஏற்பட்டது.

  இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார், மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அ.தி.மு.க தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

  இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தும் கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யதார்.

  இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.

  அப்போது தலைமை நீதிபதி என்.வி ரமணா, இந்த வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் மீண்டும் தொடங்கியது.
  • மூத்த வழக்கறிஞர் வர இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

  கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் சென்றார்.

  அப்போது பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இருந்தே நீக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

  முன்னதாக இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஐகோர்ட்டில் அளிக்கப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

  இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். சார்பில் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஓ.பி.எஸ். மீண்டும் ஐகோர்ட்டை அணுக அறிவுறுத்தியதுடன் பொதுக்குழு வழக்கை 2 வாரத்தில் முடிக்கவும் உத்தரவிட்டது.

  அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையிலேயே நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையிலேயே வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பின்னர் வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரை செய்தார். இதன்படி புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

  இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் மீண்டும் தொடங்கியது. அப்போது மூத்த வழக்கறிஞர் வர இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதை ஏற்று 10-ந்தேதி (நாளை மறுநாள்) வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

  இந்த விசாரணையை 2 வாரத்தில் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பை வழங்க உள்ளார்.

  இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான விசாரணை முடிந்து நீதிபதி அளிக்க போகும் தீர்ப்பு என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரு தலைவர்களும் தங்கள் ஊர்களில் முகாமிட்டிருப்பதால் சென்னையில் தலைவர்களை சந்திக்க முடியாமல் தொண்டர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
  • பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் வக்கீல்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வசதியாக சென்னை திரும்புகிறார்.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.

  ஒற்றை தலைமையை ஒத்துக்கொள்ளாத ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக அறிவித்தார்.

  சட்ட ரீதியாக கட்சியையும், கட்சி சின்னத்தையும் கைப்பற்றியே தீருவது என்று கங்கணம் கட்டி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

  இதற்கிடையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே வேறு நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டதால் கோர்ட்டின் விமர்சனத்துக்குள்ளானார்.

  சென்னையில் கட்சி அலுவலகம் இல்லாததால் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். பெரிய குளம் அருகே உள்ள கைலாசம்பட்டியில் பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். அரசியல் ரீதியான முக்கிய முடிவுகளை அவர் இந்த பண்ணை வீட்டில் இருந்துதான் எடுப்பார்.

  இப்போதும் பண்ணை வீட்டில் இருந்தபடியே பார்க்க வரும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டு வருகிறார்.

  அப்போது தொண்டர்கள் பலர் சசிகலாவோடு இணைந்தால் தான் எடப்பாடியை வீழ்த்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

  எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கிறார். சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளுடன் சந்தித்து பேசுகிறார். நேற்று இரவு பழனியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசினார்.

  அதன்பிறகு பழனியில் தங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சென்றார்.

  காலை 7.15 மணி அளவில் அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் கோவிலுக்கு சென்றார். அங்கு மூலவருக்கு நடந்த கால சந்தி மற்றும் சிறு கால சந்தி பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

  இருவருமே கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அதுவரை அமைதியாக இருக்கும்படி நிர்வாகிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்கள்.

  இரு தலைவர்களும் தங்கள் ஊர்களில் முகாமிட்டிருப்பதால் சென்னையில் தலைவர்களை சந்திக்க முடியாமல் தொண்டர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

  இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்ப திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் வக்கீல்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வசதியாக சென்னை திரும்புகிறார்.

  மேலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத 17 மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணயை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
  • ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் செயல் நீதித் துறையை தரம் தாழ்த்துவதாக உள்ளது என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

  கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் மற்றும் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நீதிபதி சதீஷ்குமார், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அப்போது கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார்.

  இந்த நிலையில்தான் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணயை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

  ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் செயல் நீதித் துறையை தரம் தாழ்த்துவதாக உள்ளது என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

  ஐகோர்ட்டு நீதிபதிகளின் இது போன்ற தொடர் கண்டனங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  இந்த நிலையில்தான் அ.தி.மு.க. தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.
  • சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

  சென்னை:

  ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

  கட்சியில் பின்னடைவை சந்தித்தது போல் கோர்ட்டு வழக்குகளிலும் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறார். இருப்பினும் அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

  இது கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் வெளிப்படையாகவே தெரிந்தது. மொத்தமுள்ள 1,665 பேரில் 1,400 பேர் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கையெழுத்து போட்டனர். இந்த ஆதாரங்களை எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

  இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளார். இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்களில் ஒருவரான கோவை செல்வராஜ் கூறும்போது, 'விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தவும், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்தவும் பணிகளை வழங்கி இருக்கிறார்' என்றார்.

  இதற்கிடையில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களிடமும் இணைந்து செயல்படும்படி கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்துக்கு சென்ற தினகரனுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

  மேலும் சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள். சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

  எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் சில மூத்த தலைவர்கள் ஓ.பி.எஸ்., சசிகலா எல்லோரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று கட்சியை வலுப்படுத்த வர வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. தலைமை கழகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்.
  • தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடும் விதத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது.

  கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராக டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். முறையிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஐகோர்ட்டில் நாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

  இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவங்களையடுத்து சீல் வைக்கப்பட்ட தலைமை கழக அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். என இரு தரப்பிலும் ஐகோர்ட்டில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

  இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் அ.தி.மு.க. அலுவலகத்தின் சீலை அகற்றி உடனடியாக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 20-ந்தேதி உத்தரவிட்டார்.

  இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது.

  இந்த உத்தரவின்போது அ.தி.மு.க. அலுவலகத்தின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அத்துமீறல் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து இருந்தது.

  எம்.ஜி.ஆர். மறைவின் போது இதுபோன்ற பிரச்சினை எழுந்த நேரத்தில் ஜானகி வசம் அ.தி.மு.க. தலைமை கழகம் இருந்ததால் அப்போது சாவி அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுபடுத்திய நீதிபதி இப்போது எடப்பாடி பழனிசாமி வசமே தலைமை கழகம் இருந்துள்ளது.

  எனவே சாவியை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இது எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி என்று அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். ஓ.பன்னீர் செல்வத்துக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

  இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார். தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடும் விதத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. தலைமை கழக சாவியை ஒப்படைத்ததற்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

  அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு அது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. தலைமைக்கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததது தவறாகும்.

  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானே அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் உள்ளேன். இவ்வாறு ஓ.பி.எஸ். மனுவில் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். கையில் எடுத்துள்ள சட்ட போராட்டங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஓ.பி.எஸ்.சின் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுசூதனன் நினைவு நாளை அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்கும்படி ஓ.பன்னீர்செல்வமும் உத்தரவிட்டுள்ளார்.
  • எல்லா மாவட்டங்களிலும் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர். அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் தங்கள் கைக்கு கிடைக்காதது பின்னடைவாக இருந்தாலும், சட்ட நடவடிக்கைகள், தேர்தல் ஆணையம் மூலம் கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் தீவிரம் காட்டி வருகிறார்.

  பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே தங்கள் தரப்பை வலுப்படுத்த புதிய வட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்தார்.

  மொத்த மாவட்டங்களில் தஞ்சாவூரில் 2, கன்னியாகுமரி, தேனி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். எனவே மற்ற மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார்.

  தங்கள் தரப்புக்கு மாநில அலுவலகம் ஒன்றை தற்காலிகமாக திறக்கவும் முடிவு செய்துள்ளார்கள். இதற்காக மந்தைவெளி பகுதியில் இடம்பார்த்துள்ளார்கள். நிர்வாகிகள் கணிசமாக அந்த பக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை.

  நமது பக்கம் உள்ள நியாயம் வெற்றிபெறும் போது அவர்களும் நமது பக்கம் வருவார்கள். நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களிடம் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

  ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினரை திரட்டவும், அவர்களில் தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பதவி ஏதும் இல்லாமல் இருக்கும் கட்சியினரை வரவேற்று பதவி வழங்கவும் கூறியிருக்கிறார்.

  அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், பகுதி, வட்ட கழக நிர்வாகிகளை நியமிக்க தீவிரமான கட்சி தொண்டர்களை தேர்வு செய்யும்படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  அதன்படி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரித்து வருகிறார்கள். இந்த பட்டியலுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்கள்.

  மறைந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவுநாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மகளிர் அணி செயலாளர் பா. வளர்மதி, பாலகங்கா ஆகியோர் முன்னிலையில் நாளை தண்டையார்பேட்டையில் உள்ள செல்வ வாணி மகால் திருமண மண்டபத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  இதற்கிடையில் மதுசூதனன் நினைவு நாளை அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்கும்படி ஓ.பன்னீர்செல்வமும் உத்தரவிட்டுள்ளார். எல்லா மாவட்டங்களிலும் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் போட்டி போட்டிக்கொண்டு மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளை நீக்கி விட்டு புதிய நிர்வாகிகள் பெயர்களை அறிவித்தனர்.
  • அ.தி.மு.க.வினர் இரு அணிகளாக செயல்படுவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பமான நிலை உருவாகி உள்ளது.

  புதுடெல்லி:

  அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

  அ.தி.மு.க.வில் 90 சதவீத தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் உள்ளனர் என எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோ எங்கள் பக்கம் தான் அ.தி.முக.வினர் உள்ளனர் என தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக அவர்கள் சட்ட ரீதியாகவும் போராடி வருகிறார்கள்.

  இந்த நிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு போட்டியாக ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு புதிய இணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.

  மேலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் போட்டி போட்டிக்கொண்டு மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளை நீக்கி விட்டு புதிய நிர்வாகிகள் பெயர்களை அறிவித்தனர்.

  இப்படி அ.தி.மு.க.வினர் இரு அணிகளாக செயல்படுவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பமான நிலை உருவாகி உள்ளது.

  இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் புதிதாக வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? இல்லையா என்பது தெரியவில்லை.

  எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது குறித்தும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் குறித்தும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo