என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனோஜ் பாண்டியன்"
- முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
- சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் மேலகிருஷ்ணபேரி ஊராட்சிக்குட்பட்ட முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
- வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னர்தான் டி.டி.வி.தினகரனை சென்று சந்தித்தனர்.
- சென்னை வந்ததும் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசுவார்கள்.
சென்னை:
பிளவுப்பட்டிருந்த அ.தி.மு.க.வில் இரட்டை இலையும், தலைமை கழகமும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று விட்டதால் பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் இ.பி.எஸ். பக்கம் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிகம் பேர் அவரிடம் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் பக்கம் குறிப்பிட்ட சிலர் தான் உள்ளனர். ஆனாலும் அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டு வர கோர்ட்டு தீர்ப்பை எதிர்நோக்கி ஓ.பன்னீர்செல்வம் காத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி பிரிந்து கிடக்கிற அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு உள்ளார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்று சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் செல்லவில்லை.
இதுபற்றி ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கிற அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசி உள்ளனர்.
வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னர்தான் டி.டி.வி.தினகரனை சென்று சந்தித்தனர்.
அடுத்தகட்டமாக சசிகலாவையும் சந்தித்து பேசுவார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து நேற்று பெரியகுளம் வந்தார். மீண்டும் கேரளா சென்று 4 நாள் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரிகிறது.
அதன்பிறகு சென்னை வந்ததும் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசுவார்கள். விரைவில் இந்த சந்திப்பு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.கலெக்டர் ஆகாஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
- ஆலங்குளத்தை மையமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷை நேரில் சந்தித்து நேற்று கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலங்குளம் ஒன்றியம், நாரணபுரம் ஊராட்சியை சுற்றியுள்ள பல கிராமங்களில் வசித்து வரும் மக்கள் வீராணம் பகுதிக்கு சென்று வர சிற்றாற்றை கடந்து செல்ல வேண்டும். அல்லது 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சிற்றாற்றின் குறுக்கே கீழவீராணம் முதல் நாரணபுரம் வரை இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். மேலும் குறிப்பன்குளம் கிராமத்தில் குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். ஆலங்குளம் பகுதிக்கு புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைத்து தர வேண்டும். ஆலங்குளத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையை விரிவாக்கம் செய்து மேம்படுத்தி முறையாக பணியாட்களை நியமனம் செய்ய வேண்டும்.
ஆலடிப்பட்டி, வெங்கடேஸ்வரபுரம், அய்யனார்குளம், உடையாம்புளி, அத்தியூத்து, பெத்தநாடார்பட்டி, மாதாபுரம், பாப்பாக்குடி, வடக்கு அரியநாயகிபுரம் ஆகிய ஊர்களில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்து தர வேண்டும். ஆலங்குளம் பேரூராட்சி 9-வது வார்டு, பூலாங்குளம் பஞ்சாயத்து சுப்பிரமணியபுரம் கிராமம், வெங்கடாம்பட்டி கிராமம், அழகம்மாள்புரம் பகுதிகளில் நியாய விலை கடைகள் அமைத்து தர வேண்டும். ஆலங்குளம் பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை இல்லாத காரணத்தால் அரசு பஸ்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் பஸ் நிலையத்தில் உள்ளே நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே கீழப்பாவூர் ஒன்றியம் ஆண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள இடத்தை பயன்படுத்தி அங்கு அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தற்போது செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து ஆலங்குளம் ஒன்றியம், ஆலங்குளம் பேரூராட்சி, கடையம் ஒன்றியம் மற்றும் கீழப்பாவூர் ஒன்றியம் ஆகியவற்றை முறையாக தென்காசி மற்றும் சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் இருந்து பிரித்து ஆலங்குளத்தை மையமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும். பாப்பாக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓடைக்கரை துலுக்கப்பட்டி கிராமத்தை தற்போது உள்ள பாப்பாக்குடி ஊராட்சியில் இருந்து பிரித்து தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தொண்டர்களின் நலனுக்காக ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர் செல்வம் எடுப்பார்.
- எல்லோரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும்.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும்., ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் ஒண்டி வீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம்.
வருகிற 1-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிப்போம்.
சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார். சட்டப் போராட்டம் என்பது முதல் படிதான். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.
உண்மையான அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தான் இருக்கிறது. ஓ. பன்னீர் செல்வம் அழைப்பை எதிரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொள்வார்கள்.
தொண்டர்களின் நலனுக்காக ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர் செல்வம் எடுப்பார். எல்லோரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் ஓ. பன்னீர்செல்வத்தின் விருப்பம். அதனால் தான் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.
சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரும் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்