என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு யாரும் எதிர்பாராத பதிலை சொன்ன ஓ.பன்னீர் செல்வம்
    X

    மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு யாரும் எதிர்பாராத பதிலை சொன்ன ஓ.பன்னீர் செல்வம்

    • தனது எம்எல்ஏ பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.
    • பாஜக கட்சியின் கிளை கழகம் போல் அ.தி.மு.க. செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

    முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாலையில் தனது எம்எல்ஏ பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.

    மனோஜ் பாண்டியன் அதிமுகவை விட்டு நீங்கியது குறித்து பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ வைகைச்செல்வன், தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார் என்று விமர்சித்தார்.

    திமுகவில் இணைந்தது குறித்து பேசிய மனோஜ் பாண்டியன், பாஜக கட்சியின் கிளை கழகம் போல் அதிமுக செயல்படுகிறது. அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டு செயல்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து விலகி திமுகவில் தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன்.

    திராவிட கொள்கைகளை பின்பற்றும் இயக்கமாக தி.மு.க. விளங்குகிறது. வலிமையான தமிழகத்தை உருவாக்க கூடிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம் "எல்லாம் நன்மைக்கே" என்று மட்டும் பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.

    அதேபோல ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாலேயே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், "செங்கோட்டையனை நீக்கியது அதிகாரத்தின் உச்ச நிலை. இது அழிவுக்குத் தான் வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×