செய்திகள்
சிவராஜ் சிங் சவுகான்

திருச்செந்தூரில் 7-ந்தேதி வேல் யாத்திரை நிறைவு: மாநாட்டில் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்பு

Published On 2020-12-01 10:34 GMT   |   Update On 2020-12-01 10:34 GMT
அனைத்து மாவட்டங்களின் வழியாக செல்லும் வேல் யாத்திரை வரும் 7-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது. நிறைவு விழாவை மாநாடுபோல் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
சென்னை:

தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை கடந்த 6-ந் தேதி திருத்தணியில் தொடங்கியது.

இந்த யாத்திரைக்கு கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும் அனுமதியை மீறி திட்டமிட்டபடி அந்த அந்த மாவட்டங்களில் வேல் யாத்திரை தொடர்ந்து நடத்தப்படுவதும், போலீசார் கைது செய்வதுமாக நடந்து கொண்டிருக்கிறது.

அனைத்து மாவட்டங்களின் வழியாக செல்லும் இந்த யாத்திரை வரும் 7-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது. நிறைவு விழாவை மாநாடுபோல் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இதற்காக திருச்செந்தூரில் 20 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஜே.சி.பி.எந்திரங்கள் மூலம் மைதானத்தை சமப்படுத்தும் பணிகள் இரவு பகலாக நடைபெறுகிறது.

இந்த பணிகளை மாநில பொதுசெயலாளர் கரு.நாகராஜன், துணை தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் இன்று நேரில் பார்வையிட்டனர்.

நிறைவு நாள் விழாவில் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் வேறு ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அவர் பங்கேற்றவில்லை.

அதற்கு பதிலாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொள்கிறார்.

மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்கி தயாராவதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News