செய்திகள்
கோப்புபடம்

திருக்கோவிலூர் அருகே திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை

Published On 2020-10-29 12:08 GMT   |   Update On 2020-10-29 12:08 GMT
திருக்கோவிலூர் அருகே பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூரை அடுத்துள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தில் தி.மு.க. துணை பொதுசெயலாளர் க.பொன்முடி, மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி, கவுதமசிகாமணி எம்.பி. ஆகியோர் உத்தரவின்பேரில் தி.மு.க இணையதள வழி உறுப்பினர் சேர்க்கை முகாம் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் சு.பில்ராம்பட்டு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். இவர்களுக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், கிளை செயலாளர் சுப்பிரமணி, நிர்வாகிகள் நடராஜ், லட்சுமணன், சுபாஷ், சுகுமார், முத்து, ஏழுமலை, செல்வம், பிரபாகரன், லட்சாதிபதி, சக்தி, செல்வராஜ், வேலு, பச்சையப்பன், ராமமூர்த்தி, விஜி, குமரவேல், கதிர்வேல், கோவிந்தன், பாலாஜி, சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News