செய்திகள்
ஜெயில் தண்டனை

150 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2020-10-23 07:39 GMT   |   Update On 2020-10-23 07:39 GMT
மதுரை மாவட்டத்தில் 150 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மதுரை:

கோவையைச் சேர்ந்த பாண்டியன் (வயது 32), திருப்பூரைச் சேர்ந்த பரமன் (42), ஈரோட்டைச் சேர்ந்த அலாவுதீன் (32) ஆகிய 3 பேரும் விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரை மாட்டுத்தாவணியில் 150 கிலோ கஞ்சாவுடன் காரில் வந்த பாண்டியன், பரமன், அலாவுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News