செய்திகள்
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

Published On 2020-08-02 18:02 GMT   |   Update On 2020-08-02 18:02 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைந்து, பூரண நலம்பெற வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று தனியார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இன்று அதற்கான முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தபோது மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தற்போது அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள் விரைவில் குணமடைந்து, பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.



இதேபோல, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா விரைவில் குணமடைந்து, பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். மேலும் குணமடைந்து தங்கள் பிரத்யேக பொது சேவையைத் தொடரவும்.



இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News