செய்திகள்
கைது

வாட்ஸ்-அப்பில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் என்று வதந்தி பரப்பிய 2 பேர் கைது

Published On 2020-03-31 07:40 GMT   |   Update On 2020-03-31 07:40 GMT
திருத்தணியில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்:


திருத்தணி பகுதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அது மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கடந்த 29-ந்தேதி ‘வாட்ஸ்-அப்’பில் வதந்தி பரப்பப்பட்டது. விசாரணையில் திருத்தணி காசிநாதபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன், திருத்தணியைச் சேர்ந்த அப்துல்ரகுமான், மனோஜ்குமார், வெங்கடேசன், பவானி ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவலை ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பி இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து அப்துல் ரகுமான், சாமிநாதன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News