செய்திகள்
கோப்பு படம்

கந்துவட்டி கேட்டு காங்கிரஸ் பிரமுகருக்கு கொலை மிரட்டல் - 6 பேர் மீது வழக்குபதிவு

Published On 2020-02-04 10:46 GMT   |   Update On 2020-02-04 10:46 GMT
திருக்கனூரில் காங்கிரஸ் பிரமுகரிடம் கந்து வட்டி கேட்ட கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளளர்.
புதுச்சேரி:

திருக்கனூர் வணிகர் வீதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது53). காங்கிரஸ் பிரமுகரான இவர் திருக்கனூர் வணிக வீதியில் ரைஸ்மில் மற்றும் நெல்-அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வாதானூரை சேர்ந்த ஆனந்தன் என்பவரிடம் வீட்டு பத்திரம் மற்றும் நில பத்திரத்தை அடகுவைத்து வட்டிக்கு பணம் வாங்கினார். இந்த பணத்துக்கு கண்ணன் கடந்த 6 ஆண்டுகளாக மாதா மாதம் வட்டி கட்டி வந்தார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ.4 லட்ச மதிப்புள்ள உளுந்து பயிரை ஆனந்தனுக்கு கண்ணன் வாங்கி கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய கடனுக்கும் ,வட்டிக்கும் கழித்து கொள்வதாக ஆனந்தன் கூறினார். வாங்கிய பணத்துக்கு மேல் 2 மடங்கு வட்டி செலுத்தி விட்டதாலும் ரூ. 4 லட்சத்துக்கு உளுந்த பயிர் வாங்கி கொடுத்து விட்டதாலும் ஆனந்தனுடன் பழகுவதை கண்ணன் நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆனந்தன் வாதானூரை சேர்ந்த ஆறுமுகம், மீனாட்சிசுந்தரம், சேகர், பச்சையப்பன் உள்பட 6 பேர் கண்ணன் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கண்ணணிடம் வட்டி பணம் கேட்டு மிரட்டினார்கள். அதற்கு கண்ணன் வாங்கிய பணத்துக்கு மேல் இருமடங்கு வட்டி பணம் கொடுத்தது குறித்தும், விவசாயிகளிடம் இருந்து ரூ. 4 லட்சத்துக்கு உளுந்து வாங்கி கொடுத்தது குறித்தும் எடுத்து கூறினார். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து பணத்தை கேட்டு ஆனந்தன் மிரட்டியதால் இந்த மிரட்டலுக்கு பயந்து ஒரு மாதத்தில் தனது கடையை விற்று பணம் தருவதாக கண்ணன் எழுதி கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி கண்ணன் தனது மாட்டு பண்ணையில் இருந்த போது ஆனந்து உள்ளிட்ட 6 பேரும் அங்கு வந்தனர். அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் கண்ணனை கொலை செய்யும் நோக்கத்தோடும் அவரை தாக்க ஆயுதத்துடன் பாய்ந்தனர்.

இதையடுத்து அந்த கும்பலிடம் இருந்து கண்ணன் தப்பி ஓடிவிட்டடார். அப்போது கண்ணனை அந்த கும்பல் புதுவைக்கு செல்லும் போது கொலை செய்து விடவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கண்ணன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்த ஆனந்தன், ஆறுமுகம், மீனாட்சி சுந்தரம் இவரது சகோதரர் மற்றும் சேகர், பச்சையப்பன் ஆகிய 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News