இந்தியா

நான் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவன்- ஆனால்... சாம் பிட்ரோடாவிற்கு பதிலடி கொடுத்த அசாம் முதல்வர்

Published On 2024-05-08 10:11 GMT   |   Update On 2024-05-08 10:11 GMT
  • தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள்- சாம் பிட்ரோடா
  • நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன்- ஹிமாந்தா பிஸ்வா சர்மா

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் "சாம் பாய், நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன். நாம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ளோம். நாம் மாறுபட்டதாக தோன்றுகிறோம். ஆனால் எல்லோரும் ஒன்றுதான்" என பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News