இந்தியா

உங்கள் பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் வெயில் குறித்து கவலையில்லை- ஜோதிராதித்ய சிந்தியா

Published On 2024-05-08 09:12 GMT   |   Update On 2024-05-08 10:32 GMT
  • மந்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசம் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • வாக்குச்சாவடிக்கு சென்ற அவரிடம் நிருபர் கேள்வி கேட்ட நிலையில் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

பாராளுமன்ற மக்களவை தேர்தலில் நேற்று 93 இடங்களுக்கு 3-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடுமையான வெப்ப அலை வீசிய போதிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

நேற்று மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். இவர் வாக்குப்பதிவின்போது வாக்குச்சவாடிக்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர் அவரிடம், வெப்ப அலை குறித்து கேள்வி கேட்டார். அதற்கு ஜோதிராதித்ய சிந்தியா "உங்கள் பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்துக் கொண்டால் போதும்... வெயில் குறித்து கவலைப்படத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டார்.

பொதுவாக வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அறிவியல் பூர்வமாக உடலில் வெங்காயம் படும்படி வைத்திருந்தால் உடல்நிலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என நிரூபிக்கப்படவில்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்ப அலையின்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் சோர்வை கட்டுப்படுத்த தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழ வகையில் சிறந்தது என கூறுகின்றனர்.

சிவப்பு கலரில் உள்ள வெங்காயத்தில் க்வெர்செடின் (quercetin) என அழைக்கப்படும் வேதிப்பொருள் உள்ளது. அது ஹிஸ்டமைன் எதிர்ப்பு (anti-histamine) விளைவை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

Tags:    

Similar News