செய்திகள்
சிறுத்தை

கொடைக்கானல் மலைச்சாலையில் உலா வரும் சிறுத்தை- சுற்றுலா பயணிகள் அச்சம்

Published On 2020-01-18 08:37 GMT   |   Update On 2020-01-18 08:37 GMT
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையில் உலா வரும் சிறுத்தையால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைச் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை, முயல், கடமான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு புகுந்து அட்டசாகம் செய்து வருகின்றன.

குறிப்பாக யானை, காட்டெருமை, காட்டு பன்றி பயிர்களை சேதப் படுத்துவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கொடைக்கானல்- வத்தலக்குண்டு, பழனி சாலையில் வன விலங்குகள் சாலையை அடிக்கடி கடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் டம்டம்பாறை அருகே புலிகுடத்துப்பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையோரம் படுத்திருந்தது. இதை பார்த்ததும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். வாகனங்களை மெதுவாக இயக்கினர்.

ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் சிறுத்தை சாவகாசமாக சாலையிலேயே நீண்ட நேரம் படுத்திருந்தது. பின்னர் வனப்பகுதிக்கு சென்றது. இது சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

எனவே வனத்துறையினர் சிறுத்தையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News