செய்திகள்
ஜிகே மணி

திமுக மீதான வெறுப்பால் அதிமுக வெற்றி பெற்றுள்ளது - ஜிகே மணி

Published On 2019-10-25 07:23 GMT   |   Update On 2019-10-25 07:23 GMT
திமுக மீதான வெறுப்பால் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று பாமக தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார்.

சேலம்:

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வி.பன்னீர் செல்வம் இல்ல திருமண விழா இன்று சேலத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பா.ம.க.  தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையடுத்து ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

 


தி.மு.க.வினர் அ.தி.மு.க.- பா.ம.க. மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தனர். இதனால் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால் அ.தி.மு.க. இந்த சாதனை வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சினையில் பா.ம.க.வை தி.மு.க. தவறாக விமர்சனம் செய்தது. தற்போது பஞ்சமி நிலம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையில் உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என பா.ம.க. ஏற்கனவே வற்புறுத்தி உள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்படும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து அதற்கான நிதிளை பெற முடியாத சூழல் நிலவுகிறது. நீட் தேர்வு பிரச்சினையில் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வை தொடர்ந்து பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News