செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மதுவிற்பனையை இரவு 8 மணிக்குள் முடிக்க உத்தரவு வேண்டும் - டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-08-20 12:04 GMT   |   Update On 2019-08-20 12:04 GMT
கோவையில் மதுவிற்பனையை இரவு 8 மணிக்குள் முடிக்க உத்தரவிட கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று டாஸ்மாக் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் ராமானுஜம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மதுவிற்பனை இரவு 10 மணி வரை உள்ளது. அதனை இரவு 8 மணியாக குறைக்க உத்தரவிட வேண்டும். சென்னையில் விற்பனை தொகையை அரசு வங்கி மூலம் வசூல் செய்வதுபோல் அனைத்து மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் பென்‌ஷன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிறுவனத்தலைவர் வி. சுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணி, மாவட்டத்தலைவர் சிங்காரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News