இந்தியா

6-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 39 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

Published On 2024-05-25 02:22 GMT   |   Update On 2024-05-25 04:57 GMT
  • அரியானா மாநிலத்தில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 102 பேர் கோடீஸ்வரர்கள்.
  • டெல்லியில் 162 வேட்பாளர்களில் 68 பேர் கோடீஸ்வரர்கள்.

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. டெல்லி, அரியானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

6-ம் கட்ட தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். இவர்களில் 39 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 6.21 கோடி ரூபாய் ஆகும்.

14 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 5 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 13 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை உள்ளது. 22 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 50 லட்சம் ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாய் வரை உள்ளது. 25 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சம் வரை உள்ளது. 26 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

அரியானா மாநிலத்தில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 102 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். டெல்லியில் 162 வேட்பாளர்களில் 68 பேர் கோடீஸ்வரர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் 162 வேட்பாளர்களில் 59 பேர் கோடீஸ்வரர்கள். பீகார் 35 வேட்பாளர்களும், ஜார்கண்டில் 25 வேட்பாளர்களும், ஒடிசாவில் 28 வேட்பாளர்களும், மேற்கு வங்காளத்தில் 21 வேட்பாளர்களில் கோடீஸ்வரர்கள்.

இதில் பா.ஜனதா வேட்பாளர் நவீன் ஜிண்டால் சொத்து மதிப்பு 1241 கோடி ரூபாய் ஆகும். சந்த்ருப்த் மிஸ்ராவின் சொத்து மதிப்பு 482 கோடி ரூபாய் ஆகும். டாக்டர் சுஷில் குப்தாவின் சொத்து மதிப்பு 169 கோடி ரூபாய் ஆகும். நைனா சிங் சவுதாலாவின் சொத்து மதிப்பு 121 கோடி ரூபாய் ஆகும். மேனகா காந்தியின் சொத்து மதிப்பு 97 குாடி ரூபாய் ஆகும்.

Tags:    

Similar News