search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wine sales"

    ஊத்தங்கரை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    ஊத்தங்கரை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் கிருஷ்ணகிரி வழியாக வந்த லாரியில் சாராயம் கடத்தி வருவதாக சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் வடக்கு மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்திக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இணையத் பாஷா மற்றும் போலீசார் யுவராஜ், சிவனேசன், இளந்திரையன், கவிராஜன், மகா மார்க்ஸ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் 600 கேன்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாலேந்திரசிங் (வயது33) என்பதும், வெளிமாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 600 கேன்களில் கடத்தி வரப்பட்ட சாராயம் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஊத்தங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் ஆகியோர் டிரைவாிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10 முதல் ரூ.500 வரை சமீபகாலமாக உயர்த்தி உள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 மற்றும் 4-ந் தேதிகளில் ரூ.444 கோடியே 3 லட்சத்துக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.23 கோடியே 66 லட்சம் குறைவாகும்.

    இது பற்றி மதுக்கடை விற்பனையாளர்கள் கூறியாவது:-

    நிறைய மதுக்கடைகளில் இந்த முறை மக்கள் முண்டியடித்து மது வாங்கும் அளவுக்கு அதிக கூட்டம் காணப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் இல்லாததுதான்.

    டாஸ்மாக்

    தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை (எலைட் ஷாப்) ரூ.10 முதல் ரூ.500 வரை சமீபகாலமாக உயர்த்தி உள்ளனர்.

    குறிப்பாக ஜானிவாக்கர், பெய்லி ஐரீஷ், ஜெ.பி.விஸ்கி உள்ளிட்ட மது வகைகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இதன் விற்பனை குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் மது விற்பனை குறைந்துவிட்டது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதையும் படியுங்கள்...பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக 17,719 பஸ்கள் இயக்கம்

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே 24 மணி நேர மது விற்பனையை கண்டித்து பெட்ரோல் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை கார்மேகம் என்ற வாலிபர் பழைய பஸ் நிலையம் அருகே கையில் பெட்ரோல் கேனுடன் சாலை மறியல் செய்தார். பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறோம்.

    இது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. மாறாக அவர்களும் மது விற்பனைக்கு உடந்தையாக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார். சாலை மறியலால் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே பஸ்கள் வரமுடியாமல் நிறுத்தப்பட்டன.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட வாலிபர் கார்மேகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. இதனையடுத்து அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வாலிபரை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது அங்கிருந்து பொதுமக்கள் வாலிபரை கைது செய்யக்கூடாது என்று கோ‌ஷம் எழுப்பினர். ஆனால் போலீசார் கைது செய்யப்பட்ட கார்மேகத்தை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த டாஸ்மாக் மதுக்கடையில் விடிய விடிய மது விற்பனை நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மது விற்பனை நடைபெற வேண்டும்.

    மது விற்பனைக்கு உடந்தையாக உள்ள அதிகாரி மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட வாலிபர் கார்மேகத்தை விடுதலை செய்யவேண்டும். இதே நிலை நீடித்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.
    நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் மது விற்ற 22 பேரை போலீசார் கைது செய்தனர். #arrestcase

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று இரவு அரசு மதுபானக்கடைகள் அடைத்த பிறகு ‘பார்கள்’ அருகிலேயே சிலர் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக அதிரடி சோதனை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    அதன்பேரில் நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.அதில் நெல்லை புறநகர் மாவட்டத்தில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 197 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை மாநகர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 13 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நடந்த சோதனையில் 20 வழக்குகளில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 210 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    ×