செய்திகள்
தற்கொலை

கணவர் வேலைக்கு செல்லாததால் தகராறு: தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2019-07-07 17:33 GMT   |   Update On 2019-07-07 17:33 GMT
பொள்ளாச்சி அருகே கணவர் வேலைக்கு செல்லாத தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நாகதேவி (வயது 24). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுபிக்ஷா என்கிற பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களாக ரமேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால நாகதேவி குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த நாகதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட நாகதேவியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கோவை ஆவாரம் பாளையம் பட்டாளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 65). இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். மனைவி இறந்ததால் நாகராஜன் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட நாகராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News