செய்திகள்
கி வீரமணி

ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் செயல்- கி.வீரமணி கண்டனம்

Published On 2019-06-29 22:33 GMT   |   Update On 2019-06-29 22:33 GMT
ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற திட்டமிட்ட வரிசையில், ஒரே ரேஷன் கார்டு என்பதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை ஒழித்து, மாநில உரிமைகளை பறித்து, ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.

தமிழக அரசு இந்த பிரச்சினையில் தன்னுடைய நிலைப்பாடு என்னவென்பதை தெளிவுபடுத்தி, இந்த திட்டத்தை துணிச்சலாக ஏற்க மறுக்கவேண்டும். ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டி விடக்கூடாது.

தமிழகத்தின் உணவு உரிமை என்பதைவிட நம்முடைய மாநிலத்தின் உரிமை பிரச்சினை என்பதால் தெளிவுடனும், துணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News