செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது - தமிழகத்தில் 48.57 சதவீதம் தேர்ச்சி

Published On 2019-06-05 08:31 GMT   |   Update On 2019-06-05 08:31 GMT
நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியானது. அதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
 
இந்த தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதியும், 20-ம் தேதியும் நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் தேர்வெழுதி உள்ளனர்.

இதற்கிடையே, நீட் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்படும் என்றும், தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். இதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News