செய்திகள்

காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

Published On 2018-12-14 22:02 GMT   |   Update On 2018-12-15 04:16 GMT
ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisaisoundararajan #BJP
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் மீது தவறு இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. திரும்ப திரும்ப தவறான ஒரு கருத்தை மக்களிடம் பதிய வைத்து, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இந்த தேசத்து மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.



இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ததற்கு மத்திய அரசு பொறுப்பாகாது என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கும் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பையே காங்கிரஸ் கேள்வி குறியாக்குகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #BJP #tamilisai 
Tags:    

Similar News