செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தமிழகம் கொந்தளிக்கும்- முத்தரசன்

Published On 2018-12-13 11:47 GMT   |   Update On 2018-12-13 11:47 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் தமிழகம் கொந்தளிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் கூறினார். #SterlitePlant #Mutharasan
மதுரை:

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆலையை மீண்டும் திறந்தால் தமிழகம் கொந்தளிக்கும்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தத்தளித்து வருகிறார்கள். கஜா புயல் நிவாரணத்துக்காக போராடும் மக்கள் மீது தேவையற்ற அடக்கு முறையை அரசு கையாண்டு வருகிறது.


பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். ஆனால் இது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் பயன்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #Mutharasan
Tags:    

Similar News