செய்திகள்

தண்டராம்பட்டு அருகே பன்றி காய்ச்சலுக்கு சிறுமி பலி

Published On 2018-11-14 10:43 GMT   |   Update On 2018-11-14 10:43 GMT
தண்டராம்பட்டு அருகே பன்றி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். #swineflu

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் சவுமியா (வயது 4). அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

சிறுமி சவுமியா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிறுமி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாணபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் முக்குன்றம் காலனியை சேர்ந்த ராஜாமணி மகன் தர்மராஜ் (வயது 25) கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது.

இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் தர்மராஜ் இறந்து விட்டார்.

மர்மகாய்ச்சலுக்கு தர்மராஜ் இறந்ததையடுத்து சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். #swineflu

Tags:    

Similar News