செய்திகள்

சதமடிக்குமா சென்னை விமான நிலையம்? - அச்சத்துடன் எதிர்நோக்கும் பயணிகள்

Published On 2018-09-21 08:16 GMT   |   Update On 2018-09-21 08:16 GMT
சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை 80-வது முறையாக விழுந்த நிலையில், சதத்தை விரைவில் எட்டிவிடுமோ? என்ற அச்சத்துடன் பயணிகள் உள்ளனர். #ChennaiInternationalAirport
சென்னை:

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரைகள் உடைந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த விபத்தினால் ஏற்கனவே சில பயணிகள் காயமும் அடைந்துள்ளனர். இதனை தடுக்க விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், மேற்கூரை அல்லது கண்ணாடி உடைவது மட்டும் நிற்கவே இல்லை.

இந்நிலையில், நேற்று விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் உள்ள 19-வது நடைமேடையின் மேலே உள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் கண்ணாடியை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



ஆனால், அவர்களின் துரிதம் எந்த விதத்திலும் பலனளிக்கவில்லை. 5 அடி நீளம் கொண்ட கண்ணாடி உடைந்து விழுந்தது. முன்னதாகவே விரிசல் கண்டறியப்பட்டதால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது.

80-வது முறையாக உடைந்து விழுந்த சென்னை விமான நிலைய மேற்பகுதி, சதத்தை எட்டிவிடுமோ? என்ற அச்சம் அனைவருக்கும் வந்துள்ளது. #ChennaiInternationalAirport
Tags:    

Similar News