செய்திகள்

பா.ஜ.க., தி.மு.க. கூட்டணி உருவாகுமா? - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2018-08-26 11:28 GMT   |   Update On 2018-08-26 11:28 GMT
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பதால் தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதலளித்துள்ளார்.
கன்னியாகுமரி- காஷ்மீர் 4 வழி தங்க நாற்கரச் சாலைக்கு கன்னியாகுமரியில் கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார். அதை நினைவு கூறும் வகையில் இன்று அந்த விழா நடந்த இடத்தில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது அதில் வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி: வாஜ்பாயை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரியில் சிலையோ, மணிமண்டபமோ அமைக்கப்படுமா?

பதில்: வாஜ்பாயின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு உரிய மரியாதை செலுத்தப்படும்.

கேள்வி: கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பதால் தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அமையுமா?

பதில்: எரிகிற வீட்டில் கிடைத்தது லாபம் என பிடுங்குவது போல் சில அரசியல் கட்சியினர் இதனை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள். கடந்த 3 நாட்களாக நான் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு தொடர்பான பணியில் இருப்பதால் அமித்ஷா சென்னை வருவது பற்றிய எந்தவொரு தகவலும் எனக்கு தெரியாது.

கேள்வி: தமிழகத்தில் 7 இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுவது ஏன்?

பதில்: காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 3 இடங்கள் புண்ணிய தலங்களாகும். கன்னியாகுமரியில் காலம், காலமாக முன்னோர்கள், தலைவர்களின் அஸ்தி கரைக்கப்பட்டு வருகிறது. அதேபோல வாஜ்பாயின் அஸ்தியும் கரைக்கப்பட்டு உள்ளது. மற்ற 6 இடங்களிலும் இதேபோல் அஸ்தி கரைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News