செய்திகள்

பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்து விபத்து - 3 பேர் படுகாயம்

Published On 2018-07-02 16:59 GMT   |   Update On 2018-07-02 16:59 GMT
பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பந்தலூர்:

பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரளமாநிலம் சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் அசைனார் (வயது 45). இவரது மகன் சாசுலான் (17), அசைனார் மகளின் பேரக்குழந்தை நிஷான் (5). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் காரில் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தனர். பின்னர் அதே காரில் திரும்பினர். கார் பந்தலூர் அருகே நெலக்கோட்டை மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள 200 அடி கிடு கிடு பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.

காருக்குள் இருந்த அசைனார் (வயது 45). சாசுலான் (17), நிஷான் (5) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நெலாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புபடையினரும் அங்கு விரைந்துவந்து, காருக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு, உடனே அவர்களை கேரளாவில் உள்ள மேப்பாரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News