செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரும் வழக்கு- ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

Published On 2018-04-26 06:11 GMT   |   Update On 2018-04-26 06:11 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.#SterliteProtest #CloseSterlite #Vaiko
மதுரை:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதிக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் சுற்றுச்சூழலும் மாசடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் பல்வேறு தொந்தரவுகளை அனுபவித்து வருவதாகவும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.



வைகோவின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கவோ, விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவோ மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார்.  

இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன்7-ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்தது. #SterliteProtest #CloseSterlite #Vaiko
Tags:    

Similar News