செய்திகள்
கோப்புப்படம்

ராகுல்காந்தியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

Published On 2018-04-24 07:58 GMT   |   Update On 2018-04-24 07:58 GMT
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். #RahulGandhi #Congress
சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள், மாவட்டங்களில் நடைபெறுகிற ஆய்வுக் கூட்டங்கள் ஆகியன குறித்து தெரிவிக்கப்பட்டது.

திருநாவுக்கரசர் விடுத்த அழைப்பை ஏற்று, ராகுல் காந்தி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Tags:    

Similar News