இந்தியா

புகைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய டாக்டர்

Published On 2024-05-08 05:57 GMT   |   Update On 2024-05-08 06:11 GMT
  • பதிவு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாக பரவியது.
  • பயனர்கள் பலரும் பொது சுகாதார விழிப்புணர்வுக்காக குரல் கொடுக்கும் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டி பதிவிட்டனர்.

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் சமீபத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் புகை பிடிக்காதவர்களை தோல்வி அடைந்தவர்கள் என்று விமர்சித்து  பதிவிட்டு இருந்தார். அதில், ஒரு நபர் சிகரெட் மற்றும் ஒரு கோப்பை தேநீர் வைத்திருக்கும் புகைப்படம் இருந்தது. அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி அந்த பெண்ணின் பதிவை கடுமையாக சாடி உள்ளார்.


அதோடு புகை பிடிக்காதவர்களை குறிவைத்து இழிவான கருத்துக்களுக்கு எதிராக ஒருநிலைப்பாட்டை எடுத்து, புகைபிடிப்பதால் ஒருவரது உடல் நலத்திற்கு ஏற்படும் தீமைகளை விளக்கி இருந்தார். அவரது இந்த பதிவு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாக பரவியது. இதை பார்த்த பயனர் ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு அதன் விளைவை குறைக்க முடியுமா? என்று கேட்டார்.

மற்றொருவர் ஏன் புகை பிடிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என பதிவிட்டு இருந்தார். பயனர்கள் பலரும் பொது சுகாதார விழிப்புணர்வுக்காக குரல் கொடுக்கும் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டி பதிவிட்டனர்.

Tags:    

Similar News