இந்தியா

இந்தியா வந்த பின்லாந்து அதிபர்: பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்

Published On 2026-03-05 02:33 IST   |   Update On 2026-03-05 02:33:00 IST
  • பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
  • விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன்சிங் வரவேற்றார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பல்வேறு தொழிலதிபர்கள் பங்கேற்கும் ரெய்சினா பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்ற பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இதில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.

இந்நிலையில், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஸ்டப், ரெய்சினாபேச்சுவார்த்தையில் பங்கேற்று, மும்பையில் வணிகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்து வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கப்படும். பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்லாந்து அதிபரின் இந்தப் பயணம் இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

Tags:    

Similar News