செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரசார் உண்ணாவிரதம்

Published On 2018-04-09 09:53 GMT   |   Update On 2018-04-09 09:53 GMT
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் உரிமையை பறித்த மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம்:

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் உரிமையை பறித்த மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாவட்டத்தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் விக்டர், நகர தலைவர்கள் கோபி, ஜெயபாலன், அப்துல் அஜீஸ், வட்டாரத் தலைவர்கள் ஜெயபாண்டி, சேதுபாண்டி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் ஆலம், பேச்சாளர் கருணாகரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணகாந்தி, பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மணிகண்டன், வழக்கறிஞர் அன்புசெழியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஹபீப் ரகுமான், செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், மகளிரணி தலைவர் சகுந்தலா, அபிராமம், நகர் தலைவர் அருணாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.

பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார். #tamilnews
Tags:    

Similar News