செய்திகள்

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 3¾ லட்சம் மோசடி- கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2018-04-03 16:05 GMT   |   Update On 2018-04-03 16:05 GMT
மதுரை செக்கானூரணியில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 3¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கணவன் மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை:

மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி அன்னக்கொடி (வயது 55). இவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படும் எனவும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அன்னக்கொடி பல்வேறு தவணைகளில் ரூ. 3 லட்சத்து 75 ஆயிரத்தை ரஞ்சித்குமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

பணத்தை பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அன்னக்கொடி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். அதில் ரஞ்சித்குமார் ரூ. 3¾ லட்சம் வாங்கி மோசடி செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அவரது மனைவி சுதா, தாயார் பேச்சி, சகோதரர் ஜெயச்சந்திரன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). காண்டிராக்டரான இவரிடம், மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக மதுரை எழுமலையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ரூ. 2½ லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News