செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின்

Published On 2018-03-21 06:01 GMT   |   Update On 2018-03-21 06:14 GMT
பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். #MK Stalin #PeriyarStatueIssue #TNAssembly

சென்னை:

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

அப்போது பேசிய அவர், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை மேற்கோள் காட்டி, தமிழகத்திலும் பெரியாரின் சிலை உடைக்கப்பட வேண்டும் என பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதன் பின்னரே சிலை உடைப்பு சம்பவங்கள் தொடங்கின. எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும். அவரை கைது செய்யாததால் பெரியார் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கிறது, என பேசினார்.

ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பெரியார் சிலை உடைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் நடந்த பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் 12 மணிநேரத்தில் குற்றவாளி செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் சிலை விவகாரத்தில் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும், என கூறினார். #MK Stalin #Attentiveresolution #PeriyarStatueIssue #TNAssembly #tamilnews
Tags:    

Similar News