செய்திகள்
கோவை வந்த வைகோ, மலேசியா பினாங்கு மாநில முதல்வர் ராமசாமி ஆகியோருக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

ஆந்திராவில் 5 தமிழர்கள் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்- வைகோ

Published On 2018-02-19 07:12 GMT   |   Update On 2018-02-19 07:12 GMT
ஆந்திராவில் 5 தமிழர்கள் மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோவை விமான நிலையத்தில் வைகோ கூறினார். #Vaiko
பீளமேடு:

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் கடப்பாவில் 5 தமிழர்கள் ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்க அறிக்கை பெற முயற்சிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

உலகம் முழுவதும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒடிசாவில் காவல் துறையில் உயர் பதவியில் இருந்த தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.


இந்த தாக்குதலை பாரதிய ஜனதா தான் செய்துள்ளது. இந்த தாக்குதலை மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான் நியாயப்படுத்தி உள்ளார்.

மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி 5 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனை உடைத்து ராமசாமி இந்தியா வர நடவடிக்கை எடுத்தது நான் தான்.

இவ்வாறு வைகோ கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார் உடன் இருந்தார். #Tamilnews
Tags:    

Similar News