செய்திகள்

மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு

Published On 2018-01-23 13:05 GMT   |   Update On 2018-01-23 13:05 GMT
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது போல மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் நிறுத்தப்படும் என செய்தியள் வெளியான நிலையில், இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. கடும் நிதிநெருக்கடியில் போக்குவரத்து கழகங்கள் சிக்கியுள்ளதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என அரசு விளக்கமளித்தது. இந்த கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கட்டண உயர்வை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தொடர்ந்து மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு முறையே 2,13,810, 35,921, 28,348 மாணவர்களுக்கு 100 சதவிகித இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், 3.21 லட்சம் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவிகித கட்டண சலுகை பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி செலவுகளுக்காக ரூ.540.99 கோடியினை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு மானியமாக வழங்கியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News