செய்திகள்

இந்த ஆட்சி கவிழும் என்ற கனவு எப்போதும் நடக்காது: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

Published On 2017-12-04 11:50 GMT   |   Update On 2017-12-04 11:50 GMT
இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
கோவை:

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கியபோது வ.உ.சி மைதானத்தில்தான் தனது முதல் கூட்டத்தை நடத்தினார். இந்த சிதம்பரம் பூங்காவில்தான் அவர் முதல் போர் பரணி தொடங்கினார். இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி வ.உ.சி. மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அது மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் பின்னர் மாபெரும் வெற்றி பெற்றோம்.

சிலர் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பகல் கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறோம். இந்த தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இதற்கு கொங்குநாடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கட்டியம் கூறுகிறது. வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இந்த பிரமாண்ட கூட்டம் நாளைய வரலாற்றை எடுத்துரைக்கும்.

முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி பொள்ளாச்சியின் வளர்ச்சிக்காக கேட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளார். கொங்கு மண்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும். பரம்பிகுளம், ஆழியாற்று பகுதியில் விவசாயம் செழிக்கும் வகையில் சொட்டு நீர் பாசன திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News