செய்திகள்

போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறை சோதனை: டி.டி.வி.தினகரன் கண்டனம்

Published On 2017-11-17 17:46 GMT   |   Update On 2017-11-17 17:46 GMT
போயஸ் கார்டனில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனைக்கு அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் இன்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெயா டிவி சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் சென்றார். அதிமுக தொண்டர்களும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனைக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தினகரன் டுவிட்டரில் கூறுகையில், அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அவர்கள் இருவரும் பதில் சொல்லியாக வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்தில் நடக்கும் சோதனைக்கு காரணம் என்னவாக இருந்தாலும் அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் பழனிச்சாமியும்,  பன்னீர்செல்வமும் இருக்கின்றனர். ஆட்சியைக் காப்பாற்றி கொள்ள இன்னும் எத்தனை துரோகங்கள் செய்ய காத்திருக்கின்றனரோ? என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News